A consultative meeting was held in Perambalur regarding the state DMK Adi Dravidar Welfare Committee zonal meeting to be held on December 29!
9-மாவட்டங்கள் கலந்து கொள்ளும், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு மண்டலக் கூட்டம் டிசம்பர் -29, அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்க உள்ளது. அது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் குமார், துணை அமைப்பாளர்கள் தம்பை.தர்மராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் கலந்து கொண்டு பேசினர். டிச 29-, அன்று, பெரம்பலூர் , தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் மண்டல கூட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மற்றும் இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி. இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.இராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், நீ.ஜெகதீஷ்வரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள் வரகூர்.ராஜேந்திரன், அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.