Perambalur: Electricity Board requests farmers to use solar power during daytime!
பகலில் இலவசமாகவும், புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் பொழுது ஏற்படும் மாசுபாட்டின் அளவினை குறைத்திடவும், நமது நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில் பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் இயன்றவரை தங்களது விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்திடுமாறு பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் வீ.மேகலா விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.